search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vajpayee Asthi"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 100 நதிகளில் நாளை கரைக்கப்பட உள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் மறுநாள் டெல்லியில் நடத்தப்பட்டன.

    அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நேற்று முன்தினம் அஸ்திகள் சேகரிக்கப்பட்டன. அந்த அஸ்திகளை கரைக்கும் பணி நேற்று தொடங்கியது.

    உத்தரபிரதேசத்தில் நேற்று கங்கையில் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமீதா உறவினர்களுடன் சென்று கரைத்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் யோகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதற்கிடையில் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம், சென்னை, பவானி, வைகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் வாஜ்பாய் அஸ்தியை 100 நதிகளில் கரைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி வாஜ்பாய் அஸ்திகள் பிரிக்கப்பட்டு 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 நதிகளில் வாஜ்பாய் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கரைக்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.


    புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

    இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    ×