search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikam Veeralakshmi"

    தனது குரலின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான வைக்கம் வீரலட்சுமியின் வாழ்க்கைப் படத்தில் கேரளாவில் மீன் விற்று பிரபலமான பெண் நடிக்க இருக்கிறார். #VaikamVijayalakshmiBiopic #Hanan
    கேரள மாநிலத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பிரபலமானவர் ஹனன். கல்லூரி மாணவியான இவர் குடும்ப வறுமை காரணமாக மீன் வியாபாரத்தில் இறங்கி கூவி கூவி விற்ற வீடியோ வைரல் ஆனது.

    சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி சென்றன. அரை கள்ளன் முக்கால் கள்ளன், மிட்டாய் தெரிவு, வைரல் 2019 ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ள ஹனன் அடுத்து வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார். வைக்கம் பகுதியைச் சேர்ந்த பாடகி விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முதல் பாடலிலே மாநில அரசின் விருதுபெற்றார்.



    அதன்பின், தமிழ், மலையாளம் என பல பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பல பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #VaikamVijayalakshmiBiopic #Hanan

    ×