search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadaseri Krishnar Temple"

    • பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.
    • கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில் என்ற ஊர்.

    இங்கு அழகான கிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோவில் இங்கு அமைந்துள்ளதாலேயே அந்த ஊருக்கு கிருஷ்ண கோவில் என பெயர் வந்தது.

    இங்கு உள்ள மூலவர் "பாலகிருஷ்ணன்" குழந்தை வடிவில் நின்றபடி காட்சி அளிக்கிறார்.

    அவர் தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துள்ளார். கிழக்கு பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இக்கோவிலில் உள்ள பாலகிருஷ்ணனை நாம் தரிசிக்கும் போது,

    நம் வீட்டுப்பிள்ளை இருகைகளில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நிற்பது போன்று காட்சி அளிக்கிறார்.

    இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார்.

    இத்தலத்தில் இரவு நேர பூஜையின் போது தினமும் பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.

    குழந்தைக்கிருஷ்ணனை தூங்க வைப்பதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் கிருஷ்ணனுக்கு நிவேதித்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

    தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து "பால கிருஷ்ணனை" வழிபட்டு,

    வெண்ணெய் பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவில் என்பதால் இங்கு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று

    நள்ளிரவில் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    மேலும் இங்கு துலாபார பிரார்த்தனைக்கும் தனி இடம் உள்ளது.

    நாகர்கோவில், வடசேரி பஸ்நிலையத்தில் இருந்தவட மேற்கு திசையில் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இங்கு செல்வதற்கு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்,

    வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையங்களில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

    ×