என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urmila Matondkar"

    • ஊர்மிளாவுக்கும், மொஹ்சின் அக்தர் மிர்-க்கும் 2016-ல் திருமணம் நடைபெற்றது.
    • திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

    1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஊர்மிளா மடோன்கர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தவர். இவருக்கென இந்தி திரையுலகில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

    சினிமாவில் நடித்து கொண்டிருந்த போதே தொழில் அதிபரும், மாடலிங் துறையை சேர்ந்தவருமான மொஹ்சின் அக்தர் மிர்-ஐ 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். சினிமா, நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் ஊர்மிளா மடோன்கர்.

    இந்நிலையில் ஊர்மிளாவுக்கும், கணவர் மொஹ்சின் அக்தர் மிர்-க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் ஊர்மிளா மடோன்கர் மனு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கவனமாக பரிசீலித்து இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனார் பரஸ்பர முடிவால் இந்த விவாகரத்து முடிவுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    அவர்களது 8 வருட சினிமா வாழ்க்கையில் தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. ஊர்மிளாவுக்கு 50 வயதாகிறது. வயது மொஹ்சினுக்கு 40 வயதுதான் ஆகிறது. 10 வயது இடைவெளி என்பது திருமணத்தின்போது பெரிய விவாத பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இருவருடைய திருமணம் ஒரு ரகசிய திருமணம் போன்று நடந்தது. திருமணம் ஊர்மிளா மடோன்கரின் மும்பை இல்லத்தில் நடைபெற்றது. அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    இந்தியில் ரங்கீலா, ஜுடாய், மஸ்த், பியார் துனே கியா கியா பூட் போன்ற பிரபல படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக இந்தியன் பட நடிகை தெரிவித்துள்ளார்.
    தமிழில் இந்தியன் மற்றும் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார். 

    ஊர்மிளா மடோன்கர்
    ஊர்மிளா மடோன்கர்

    இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
    ×