என் மலர்
நீங்கள் தேடியது "Urine Bag"
- சதார் மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டிலை பொருத்தியுள்ளனர்.
- மருந்துகள் பற்றாக்குறையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது.
பாட்னா:
பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு நோயாளி சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். அப்போது பரிசோதனை முடிந்து நோயாளிக்கு சிறுநீர் பையை பொருத்தும்படி ஊழியர்களுக்கு டாக்டர் அறிவுறுத்தினார்.
உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் அந்த ஊழியர்கள் சிறுநீர் பைக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டிலை இணைத்துள்ளனர்.
நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பலனில்லை. மறுநாள் காலை அவருக்கு சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
பொறுப்பில் இருந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்படவில்லை என மருத்துவமனை அதிகாரி கூறினார். அதன்பின், தேவையான பொருட்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டில் பொருத்தப்பட்டது பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






