search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UK PM race"

    • பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி
    • நேரடி விவாதத்திற்கு பிறகு லிஸ் டிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் புதிய பிரதமர் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக முடியும். இதற்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரதமராகும் வாய்ப்பு லிஸ் டிரசுக்கு 90 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக்கிற்கான வாய்ப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. இவர்கள் இருவரை தவிர பிறருக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது பேசிய லிஸ் டிரஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கான ஆதரவு சதவீதம் ரிஷி சுனக்கை விட அதிகரித்து விட்டதாக கருதப்படுகிறது.

    ×