என் மலர்
நீங்கள் தேடியது "Truck theft"
- முட்புதரில் லாரியை மறைத்து தப்பிச் சென்றனர்
- செல்போன் எண் சிக்னலை வைத்து பிடித்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 வழி சாலையாக இருந்து இந்நிலையில் தற்போது 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ், மதுரை வீரன், சந்திரன் ஆகிய 3 பேரும் டிப்பர் லாரி டிரைவர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் டிரைவராக பணிபுரிந்து ஓட்டி வந்த லாரிகளை கடத்த ஒன்றாக கூடி பேசி லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சேந்தமங்கலம் அருகே சென்றபோது டீசல் காலியானதால் அதே பகுதியில் உள்ள ஏரியின் முட்புதரில் லாரியை மறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற 3 பேரையும், லாரியையும் கண்டுபிடித்து தருமாறு ஒப்பந்ததாரர் ராகுல் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 ேபரின் செல்போன் எண் சிக்னலை வைத்து 3 பேரையும் போலீகார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த லாரியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அரக்கோணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.






