search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transport association union protest"

    தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்கக்கோரி போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணமான ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி கொடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அன்றே பணப்பலனை முழுமையாக வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ரிசர்வ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். விடுப்பு சம்பளம், டி.ஏ. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளை முன்பு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் கிளை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் சிங்கராயர் முன்னிலை வகித்தார். அப்போது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி., அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்பட போக்குவரத்து கழகத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலையில் முடிவடைந்தது.
    ×