என் மலர்

  நீங்கள் தேடியது "trade damage"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் இன்று மட்டும் சுமார் 100 கோடிக்கு பண பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.#Bankstaff #strike
  திருப்பூர்:

  சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.

  திருப்பூர் மாவட்டத்தில் பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 372 கிளைகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு பண பரிவர்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று மட்டும் சுமார் 100 கோடிக்கு பண பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளையும் தொடர்வதால் இரு நாட்களும் சேர்த்து திருப்பூர் மாவட்டத்தில் 200 கோடிக்கு வர்த்தகம் மற்றும் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் பனியன் தொழிலாளர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். #Bankstaff #strike
  ×