search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tobacco sezied"

    தென்காசியில் நள்ளிரவில்லோடு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தென்காசி:

    தென்காசி நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவில் நகர் பகுதிக்குள் ஒரு வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக போலீசார் தென்காசி பஜாரில் உள்ள அரசமரத்தடி அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினிலோடு ஆட்டோவை தடுத்துநிறுத்தினர். அதில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.

    போலீசார் அவர்களை துரத்தி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மினிலோடு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    சுமார் 700 கிலோ எடை கொண்ட புகையிலையை போலீசார் லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதில் ராஜஸ்தான் மாநிலம் சபரி புரத்தை சேர்ந்த பிரதாப்படேல் (வயது 35) மற்றும் ரமேஷ் படேல் (19) ஆகியோர் என்பதும், 2 பேரும் தென்காசி அணைக்கரை தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், 2 பேரையும் கைது செய்தார்.
    ×