search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC group II exam"

    மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை 6 ஆயிரத்து 530 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2 ஆயிரத்து 566 பேர் எழுதவில்லை.
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 96 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக சிவகங்கை தாலுகாவில் 17 மையங்களும், தேவகோட்டை தாலுகாவில் 4 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 6 ஆயிரத்து 530 பேர் தேர்வை எழுதினர். 2 ஆயிரத்து 566 பேர்தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வுகளை கண்காணிக்க கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் மேற்பார்வையில் துணை கலெக்டர்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வுகள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

    காரைக்குடியில் குரூப்-2 தேர்வு அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக், அழகப்பா கலைக்கல்லூரி, உமையாள் ராமநாதன் கலைக்கல்லூரி, மு.வி.மேல்நிலைப்பள்ளி, ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரி, சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மேல்நிலைப்பள்ளி, சாரதா நிகேதன் கல்லூரி, முத்தையா அழகப்பா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காரைக்குடி மையங்களில் மட்டும் தேர்வு எழுத 3 ஆயிரத்து 547 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 975 பேர் வரவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட வருவாய் அதிகாரி, தாசில்தார் மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
    ×