என் மலர்
முகப்பு » Thiruvananthapuram zoo
நீங்கள் தேடியது "Thiruvananthapuram zoo"
- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது.
- குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அனுமன் குரங்கை இன்னொரு கூண்டிற்கு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு குரங்கு கூண்டில் இருந்து தப்பி விட்டது. உடனே அதை பிடிக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அந்த குரங்கு வனவிலங்கு பூங்காவின் மதில் மேல் ஏறி சாலைக்கு சென்றுவிட்டது. அதனை ஊழியர்கள் துரத்தி சென்றனர். ஆனால் குரங்கு ஊழியர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி விட்டது.
இந்த குரங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வனவிலங்கு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
×
X