என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thai boat accident"

    தாய்லாந்து நாட்டில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்துள்ள நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என தெரியவந்துள்ளது. #Thaiboatdisaster
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று மாலை 105 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    மீட்புப்பணிகளில் தாய்லாந்து கடற்படை வீரர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டிருந்தன.



    இன்று மாலை நிலவரப்படி, இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும். உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது. #Thaiboatdisaster
    ×