என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test Twenty"

    • டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும்.
    • ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது.

    புதிய கிரிக்கெட் வடிவமான "டெஸ்ட் ட்வென்டி" (Test Twenty) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கிரிக்கெட்டின் 4-வது வடிவமாக பார்க்கப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக இந்த வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வடிவம் 13-19 வயதுடைய இளைஞர்களை கவர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பாரம்பரியமாக பிரபலமில்லாத நாடுகளில் விளையாட்டை பரப்புவது இதன் முதன்மை நோக்கங்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபுகளை பாதுகாக்கவும், இளம் தலைமுறையை ஈர்க்கவும் உதவும்.

    இதன் விதிமுறைகளி படி, ஒரு போட்டி மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டது. டெஸ்ட் போட்டிகளைப் போலவே, ஒவ்வொரு அணியும் இரண்டு முறை (தலா 20 ஓவர்கள்) பேட்டிங் செய்யும். இதன் முடிவுகள் வெற்றி, தோல்வி, சமன் அல்லது டிரா என அமையலாம். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் உத்திகளையும், டி20யின் வேகத்தையும் இணைக்கிறது.

    இந்த தொடரின் முதல் சீசன் ஜனவரி 2026-ல் தொடங்கவுள்ளது. முதல் இரண்டு பதிப்புகளும் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இது சர்வதேச சுற்றுப் போட்டியாக மாற உள்ளது.

    முதலில் ஆறு உலகளாவிய அணிகள் இதில் பங்கேற்கும். அதன்படி இந்தியாவில் மூன்று, துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவில் தலா ஒன்று. ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். அதில் 8 இந்தியர்கள், 8 சர்வதேச வீரர்கள் அடங்கும்.

    இந்த புதுவடிவ கிரிக்கெட்டை உருவாக்கியவர் கவுரவ் பஹிர்வானி. இதன் ஆலோசனை குழுவில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சர் கிளைவ் லாய்ட், மேத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங், ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

    ×