search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary teacher job"

    • பள்ளிக்கு அருகே, மாவட்டத்துக்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
    • தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி இல்லாதபட்சத்தில் உடனே பணியிலிருந்து நீக்கப்படும்.

    பள்ளிக்கல்வித்துறையில் உள்ள 13,100 ஆசிரியர் காலி பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நியமிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேள்வி எழுப்பியது.

    இந்தநிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் பள்ளிக் கல்வியின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கப்படுகிறது.

    1-6-2022 தேதியில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ உரிய கல்வி தகுதி சான்று களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

    முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 30.1.2020-ன் படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள்.

    வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    முதுகலை ஆசிரியர்கள் வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    விண்ணப்பங்களை ஆசிரியர் குழு சரி பார்த்து தகுதியானவர்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அறிவுறுத்தி அவர்களது திறனை அறிய வேண்டும்.

    தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியே வருகை பதிவேடு, தொகுப்பூதியம் பதிவேடு பேனப்பட வேண்டும்.

    இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. முறையான நியமனங்கள் மூலம் காலி பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

    மேலும் அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×