search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temporary Road"

    • ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
    • சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.

    சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ. 6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

    இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வந்தன.

    நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம், கடலங்குடி, பூதங்குடி, உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.

    இந்த தண்ணீர் அனைத்தும் தேனூர் கதவனை வழியே கடலுக்குள் திருப்பி விடப்படும்.

    தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளுக்காக தேனூர் கதவனை மூடப்பட்டதால் தண்ணீர் தேங்கி தற்காலிக பாலத்தை தண்ணீர் மெல்ல மெல்ல சுழ்ந்து வருகிறது.

    இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பாலம் கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கதவணையைத் திறந்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×