search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tearful request"

    • மணிப்பூர் வன்முறை தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்
    • நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

    மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன். தற்போது நடந்த மேட்ரிக்ஸ் பைட் நைட் (MFN) போட்டியில் அவர் பங்கேற்றார். வெற்றிக்கோப்பையுடன் சுங்ரெங் கோரன் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க உணர்ச்சிப்பூர்வமாக கோரிக்கை விடுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன் பேசியதாவது :-

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், இனக்கலவரம், வன்முறை மோதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி அங்கு சென்று அமைதியை மீட்டெடுக்க வேண்டுகிறேன். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூர் வன்முறை தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.

    குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. எதிர்காலம் தெளிவாக இல்லை. எனவே பிரதமர் மோடி தயவு செய்து ஒருமுறை மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன் கண்ணீர் மல்க வைத்த கோரிக்கை குறித்த வீடியோ சமூக வளைத்தலங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    ×