என் மலர்
நீங்கள் தேடியது "SELLING LIQUOR WITHOUT PERMISSION மது விற்ற வழக்கில் வாலிபர் கைது"
அரியலூரில் அனுமதியின்றி மது விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ்(41) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
இதில் விற்பனை செய்வதற்காக அவரது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மறைத்து வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






