search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு"

    டெக்சாஸில் உள்ள ஆரம்ப பள்ளியில் கடந்த மே 25-ஆம் தேதி இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
    வாஷிங்டன்:

    துப்பாக்கி கலாசாரம் என்பது அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருகிறது. பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகள் நடப்பதும், அதனால் பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினாலும் அரசு பெரிதும் இந்த சம்பவங்களில் கவனம் செலுத்துவதில்லை.

    கடந்த மே 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார். பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் இரங்கலும் தெரிவித்தார். பின் அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனையும் செய்தார்.

    பிரார்த்தனை முடிந்து அவர் தேவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் " இந்த சம்பவம் குறித்து  ஏதாவது செய்யுங்கள்" என ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்டனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர், "நிச்சயமாக , நிச்சயமாக" என தெரிவித்தபடியே நடந்து சென்று, அங்கிருந்து கிளம்பினார்.
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 21 பேரின் உயிரை பறித்த அமெரிக்க இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நியூயார்க் :

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    சால்வடார் ராமோஸ் 3 வயது இருக்கும் போதே அவரது தாயும், தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார். ராமோசின் தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதோடு, ராமோசை தினமும் அவரது தாய் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

    இதனால் தாயிடம் இருந்து பிரிந்து பாட்டியுடன் வசித்து வந்த ராமோசுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால் பள்ளியில் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வந்தார். இதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 18 வயது நிரம்பியதும், சேகரித்து வைத்த பணத்தில் 2 நவீன துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்.

    அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து, பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ராமோஸ் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.

    இதையும் படிக்கலாம்...அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு- பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
    பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் மற்ற அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.
    டெல்சாஸ்:

    அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது.

    இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    அதேபோல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார்.

    வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

    துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி ஜப்பானில் இருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

    பின்னர் ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய ஜோபைடன் கூறும்போது, ‘கடவுளின் பெயரால் நாம் எப்போது துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக நிற்கப்போகிறோம்? இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கிறது. துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உயிரிழப்பால் நான் சோகத்தில் இருக்கிறேன் என்றார்.

    பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் மற்ற அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்’ என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

    இதுதொடர்பாக, உவால்டே மாநில கவர்னர் கூறுகையில், சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர். அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் எனவும், அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் தெரிவித்தார். 

    படுகாயம் அடைந்த குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
    ×