என் மலர்
நீங்கள் தேடியது "கேகே வீரப்பன்"
- தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தி.மு.க. மாவட்ட செயலாளராக 1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லை சேர்ந்தவர் கே.கே.வீரப்பன் (வயது 77). முன்னாள் எம்.பி.யான இவர் நுரையீரல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் நாமக்கல் சந்தைபேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
காலமான கே.கே. வீரப்பன் 1991-96 -ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும், அதே வருட காலத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும் இருந்தார். இவர் 1996 -ம் ஆண்டு தேர்தலில், கபிலர்மலை தொகுதியில் இருந்து தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளராக 1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாக ஓய்வு எடுத்து வந்தார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் கால்நடை மருத்துவராகவும், ராஜேந்திரகுமார் என்ஜினீயராகவும் பணியாற்றி வருகின்றனர்.






