search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swachhta Campaign"

    • மத்திய அமைச்சகங்களின் சுற்றுப்புறப் பகுதிகள் அழகுப்படுத்தப்பட்டன.
    • பாராளுமன்ற வாக்குறுதிகளில் நிலுவையில் உள்ளவை நிறைவேற்றப்பட்டன.

    தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பு இயக்கம் 2ந் தேதி முதல் 31ந் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சகங்கள் பங்கேற்றன. மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறை, நிதியமைச்சகம், பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் அவற்றுடன் சேர்ந்த தன்னாட்சி அமைப்புகள் இதில் கலந்து கொண்டன. இதன் ஒரு பகுதியாக அந்த அமைச்சகங்கள் அமைந்துள்ள இடத்தின் தாழ்வாரங்களை அழகுப்படுத்துதல், அறைகளை புனரமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 


    மேலும் இந்த அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள விஷயங்கள் பைசல் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிலுவையில் இருந்த 19-ல் 13 நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் குறை தீர்ப்பு தொடர்பான 278 விஷயங்களில் 185 பைசல் செய்யப்பட்டன. 1,750 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு இதுவரை 1,520 கோப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பயன்படாத பொருட்கள் விற்பனை மூலம் ரூ.50,000 ஈட்டப்பட்டது.

    இதேபோல் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை சார்பில் நாடு முழுவதும் 294 இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் 9 விவகாரங்கள், பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்த பொதுமக்கள் குறை தீர்ப்பு விவகாரம் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்பட்டது. சுமார் 850 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 322 கோப்புகள் நீக்கப்பட்டன. கழிவுப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இதுவரை 10,72,00,960 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×