என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suryavin sanikizhamai"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நானியின் 31-வது படத்தை 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    சூர்யாவின் சனிக்கிழமை போஸ்டர்

    டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. நானி கையில் விலங்குடன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் விவேக் ஆத்ரேயா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இதில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.

    தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதில் நானி மற்றும் பிரியங்கா மோகன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    ×