search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St James"

    • 29-ந் தேதி இரவு நற்கருணை பவனியும், அசன விருந்தும் நடக்கிறது.
    • 30-ந்தேதி புனிதரின் திருவுருவ தேர் பவனி நடைபெற உள்ளது.

    நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை இறை மக்கள் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி, மறை உரையாற்றினார். இதில் பங்கு தந்தை ஜீவா மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு நற்கருணை பவனியும், அசன விருந்தும் நடக்கிறது. 30-ந் தேதி நண்பகலில் புனிதரின் அன்பு உணவு வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர் பவனி நடைபெற உள்ளது.

    31-ந் தேதி காலை 10 மணிக்கு கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி பங்கேற்று மறையுரையாற்ற உள்ளார். மாலையில் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

    ×