search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka T20 Squad"

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் களம் இறங்க மறுத்ததால் ஐசிசி தடைவிதித்தது. இந்த தடை முடிந்து சண்டிமல் களம் இறங்க உள்ளார். #Chandimal
    இலங்கை அணி ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. 2-வது டெஸ்டின்போது இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பந்தை மாற்ற வேண்டும் என்று நடுவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை எதிர்த்து சண்டிமல் தனது அணியுடன் களம் இறங்க மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேர ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி சண்டிமலுக்கு மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதித்தது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட், நான்கு ஒருநாள் போட்டியில் சண்டிமல் பங்கேற்கவில்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நேற்றைய 4-வது போட்டியுடன் சண்டிமல் தடை முடிவடைந்தது.



    இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஐந்தாவது போட்டியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டிக்கான இலங்கைய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20-க்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மேத்யூஸ், 2. தசுன் ஷனகா, 3. குசால் பேரேரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. உபுல் தரங்கா, 6. குசால் மெண்டிஸ், 7. திசாரா பெரேரா, 8. ஷெஹன் ஜெயசூர்யா, 9. ஷெஹன் மதுஷங்கா, 10. ரஹிரு குமாரா, 11. தினேஷ் சண்டிமல். 12. அகிலா தனஞ்ஜெயா, 13. ஜெஃப்ரே வாண்டர்சே, 14. பினுரு பெர்னாண்டோ.
    ×