search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special carried cover"

    ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. #Rasogolla #PostalStamp
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையான ரசகுல்லா, நாடு முழுவதும் சுவை பிரியர்களின் ஆதரவை பெற்றது. நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த இனிப்பை, கொல்கத்தாவின் பக்பசாரில் வசித்து வந்த நோபின் சந்திரதாஸ் என்பவர் கடந்த 1868-ம் ஆண்டு உலகுக்கு அறிமுகம் செய்தார்.

    மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த இனிப்பு கடந்த ஆண்டு புவிசார் குறியீட்டை பெற்றுக்கொண்டது. இந்த இனிப்புக்கு ஒடிசாவும் சொந்தம் கொண்டாடியதால், புவிசார் குறியீடு பெறுவதற்காக மேற்கு வங்காள மாநிலம் பயங்கரமாக சட்டப்போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றது.

    ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. பக்பசாரில் நடந்த ரசகுல்லா திருவிழாவில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரி பிர்ஹத் ஹக்கிம், நோபின் சந்திரதாசின் பேரன் திமான் தாஸ், கொல்கத்தா தபால் நிலைய அதிகாரி சாருகேஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #Rasogolla #PostalStamp 
    ×