search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP leader"

    • தாரா சிங் ஜிந்தாபாத் என கூறியவாறே இன்க்கை தெளித்து விட்டு ஓடி விட்டார்
    • இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள அடாரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார்.

    அப்போது அங்கு வரவேற்பளிக்க காத்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையே இருந்த ஒருவர் "தாரா சிங் ஜிந்தாபாத்" என உரத்த குரலில் கூறியவாறே தாரா சிங்கை நெருங்கி வந்து அவர் மீது இன்க்-ஐ ஊற்றி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

    "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகழும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நற்பெயரும் சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்," என தாரா சிங் கூறினார்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை தேடி வந்தது.

    இந்நிலையில் இக்குற்றத்தை செய்ததாக அபிமன்யு யாதவ் என்பவர் கோசி காவலதுறையிடம் தானாக சரணடைந்துள்ளார். ஆனால், தாக்குதல் நடத்திய காரணம் குறித்து அபிமன்யு அதிர்ச்சியளிக்கும் விதமாக கருத்து கூறியுள்ளார்.

    "இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான நிலையில் இருக்கிறது என்பதால் இதை செய்ய சொல்லி பா.ஜ.க.வின் கமிட்டி உறுப்பினர் பிரின்ஸ் யாதவ் கேட்டு கொண்டார். அதனால் இச்செயலை நான் செய்தேன். என்னை காப்பாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்," என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

    இவர் சரணடைந்துள்ளதை உறுதி செய்துள்ள நகர காவல்துறை அதிகாரி தனஞ்சய் மிஸ்ரா, அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் முதலில் சமாஜ்வாதி கட்சியினரால் தூண்டப்பட்டு நடைபெற்றதாக நம்பப்பட்டது. பிறகு பா.ஜ.க.-வினரே செய்ய சொன்னார்கள் என்று இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

    • முறையாக அனுமதி பெறாமல் பேரணி நடத்துவதாக காவல்துறை புகார்.
    • மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் விவாதிக்க தயார் என்று துணை முதல்வர் உறுதி.

    லக்னோ:

    உத்தரபிரதேச சட்ட சபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சட்டசபையை நோக்கி பேரணியாக சென்றனர்.

    பேரணி லக்னோ எஸ்பி அலுவலகத்தில் தொடங்கி ஆளுநர் மாளிகை, பொது தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை வழியாக சட்டசபை கட்டிடமான விதான் பவனில் முடிவடையும் என்று சமாஜ்வாதிக் கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    பழிவாங்கும் மனநிலையுடன் மாநில பாஜக அரசு செயல்படுவதால் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அவர் குற்றம் சாட்டினார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை சட்டசபைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் சட்டசபையை நோக்கி பேரணி நடத்துவதற்கு சமாஜ்வாதி கட்சி முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், நியமிக்கப்பட்ட பாதையில் அவர்கள் சென்றால், எந்த பிரச்சனையும் இருக்காது என லக்னோ காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு இணை ஆணையர் பியுஷ் மோர்டியா தெரிவித்தார்.

    சமாஜ்வாதி போராட்டம் சாமானிய மக்களின் நலனுக்கானது அல்ல என்றும், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டுமானால், சட்டசபையில் அதைச் செய்யலாம், எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது என்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கே.பி.மவுரியா கூறியுள்ளார்.

    ×