search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "south korea women"

    • தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும்.

    தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார். இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவரை முத்தமிட முயன்றார்.

    இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள். அவள் எனது வீடு பக்கத்தில்தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை.

    இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில் தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி கூறியதாவது:- மும்பையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    இந்த விவகாரம் தூதரக ரீதியிலான பிரச்சினையாக மாறினால், கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும் என்று கூறினார்.

    ×