search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart City plans"

    தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1,366 கோடி மதிப்பீட்டில் தியாகராய நகரை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தணிகாசலம் சாலையில் பல அடுக்கு வாகன நிறுத்தம், எல்.இ.டி. மின் விளக்குகள், நடைபாதை வளாகம், பூங்காக்கள், மழை நீர் வடிகால் மேம்படுத்தும் பணிகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

    இதில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி மற்றும் நடைபாதை பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தியாகராய நகரில் சாலைகளை விரிவு படுத்துவதற்காக அங்குள்ள சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

    தியாகராய நகர் ரோட்டில் 12 மரங்கள் வேரோடு வெட்டப்பட்டு அழிக்கப் பட்டுள்ளன. பாண்டி பஜார் சாலையில் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள், வியாபாரிகள், என்.ஜி.ஓ.க்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மரங்கள் வெட்டப் படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    ஸ்மார்ட் சிட்டி நகரம் என்ற பெயரில் தியாகராய நகர் தற்போது சீரழிக்கப்பட்டு வருகிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலைகள் தோண்டப்படுகிறது என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ×