என் மலர்
நீங்கள் தேடியது "ஜவஹர்லால்நேரு"
திருப்பூர்திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரித்துஜா முதலிடத்தை பெற்றுள்ளார்.
ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை ஒட்டி திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவாஹர்லால் நேரு பிறந்த நாளை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் 37 பேர் பங்கேற்றனர். இதில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரித்துஜா முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மகாதேவன் 2-ம் இடத்தையும், கே.செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எழிழரசன் 3-ம் இடத்தையும் பிடித்தனர் .
பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கிருத்திகா, தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பூபதி ஆகியோர் சிறப்பு பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் 16 பேர் பங்கேற்றனர்.
இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி பிருந்தா முதலிடத்தையும், ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கரிஷ்மா 2-ம் இடத்தையும், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தாமோதரசாமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






