என் மலர்
நீங்கள் தேடியது "அனந்தன் காடு"
- ஆர்யா ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்
- இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆர்யா ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசரை நடிகர் கார்த்தி மற்றும் விஷால் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.






