என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயிற்றுப் பருமன் பாதிப்பு"

    • அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் உபாதைகள் குறைவாக இருந்தது.
    • கட்டுப்பாடான உணவு பழக்கம், உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும்.

    பெண்கள் அந்த காலத்தில் வீட்டு வேலைகளை அவர்களே செய்து வந்தனர். குறிப்பாக அம்மியில் மசாலா அரைப்பது, மாவு அரைப்பது, துணி துவைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வந்ததால் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. இதனால் அந்த கால பெண்களுக்கு வயிற்று பருமன் போன்ற உபாதைகள் குறைவாக இருந்தது.


    தற்போது வீட்டு சமையல் அறையை எந்திரங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அனைத்து வேலைகளையும் எந்திரங்கள் மூலமாக பெண்கள் செய்கின்றனர். இதனால் உடல் உழைப்பு குறைந்து பலர் வயிற்று பருமன் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது பற்றி சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் அனைத்து தென் மாநிலங்களில் உள்ள பெண்களில் 35 சதவீதத்துக்கு மேல் வயிற்றுப் பருமன் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    தென்னிந்தியா முழுவதும் பெண்களிடையே வயிற்றுப் பருமனின் பரவல் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


    அதிக வருமானம் கொண்ட பெண்கள் 32 சதவீத ஆற்றல் கொழுப்பில் இருந்து பெறப்பட்ட உணவை உட்கொள்கின்றனர், அதே சமயம் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் 17 சதவீத ஆற்றல் மட்டுமே கொழுப்பு உணவுகள் சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    தென்னிந்திய மக்களிடையே (72 சதவீதம்) உடல் உழைப்பின்மை மிக அதிகமாக உள்ளது, இதனால் தென்னிந்திய பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    அதைத் தொடர்ந்து நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது. கிராமப் புறங்களிலும் பெண்களின் உடல் செயல்பாடு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


    ஆண்களுக்கு குறைவு

    மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மொத்தத்தில், நாட்டில் வயிற்றுப் பருமன் பாதிப்பு பெண்களில் 40 சதவீதமாகவும், ஆண்களில் வெறும் 12 சதவீதமாகவும் உள்ளனர்.

    வயிற்றுப் பருமன் அதிகமாக இருப்பதால், வட இந்தியாவில் உள்ள பெண்களை விட, தென் மாநிலத்தில் உள்ள பெண்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம், சிறுநீரகம் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களிடையே வயிற்றுப் பருமன் பாதிப்பு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உள்ளது. கட்டுப்பாடான உணவு பழக்கம் உடற்பயிற்சி இதற்கு தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

    ×