என் மலர்
நீங்கள் தேடியது "பிபிஎல்"
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
சென்னை:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
- ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
- இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.
பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிபிஎல் நிறுவனர் கோபாலன் நம்பியார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
- இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்திய மின்னணு நிறுவனமான பி.பி.எல். குழும நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் வியாழக்கிழமை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. 94 வயதான நம்பியார் கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
டிபிஜி (DPG) என்று பிரபலமாக அறியப்பட்டவர் கோபாலன் நம்பியார். இவர் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் "பி.பி.எல். பிராண்டின் நிறுவனர் ஸ்ரீ டிபிஜி நம்பியாரின் மறைவு வருத்தமளிக்கிறது. நெடுங்காலமாக நெருங்கிப் பழகிய ஸ்ரீ நம்பியாரின் மகத்தான பங்களிப்புகள் மற்றும் அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.






