search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமகிரி ஸ்ரீ காலபைரவர்"

    • தென்திசை நோக்கிய கருவறையில் காணப்படும் இந்த ஸ்ரீகால பைரவருக்கு ஸ்ரீசந்தான கால பைரவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இது
    • குழந்தைச் செல்வம் வரமருளும் சிறந்த தலம்.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி ஸ்ரீகால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது.

    இந்த பைரவ ஆலயத்தில் ஸ்ரீகால பைரவர் தனது சக்தியான ஸ்ரீகாளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தென்திசை நோக்கிய கருவறையில் காணப்படும் இந்த ஸ்ரீகால பைரவருக்கு ஸ்ரீசந்தான கால பைரவர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    இது குழந்தைச் செல்வம் வரமருளும் சிறந்த தலம்.

    குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியர் இக்கோவிலின் நந்தி தீர்த்தத்தில் புனித நீராடி, ஸ்ரீகாளிகா தேவி சமேத ஸ்ரீகால பைரவரை தரிசித்து, வேண்டுதலுக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும் கல் நாய்க்குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பைரவரின் பெரிய நாய் வாகனத்தை மும்முறை வலம் வந்து, கல்நாய்க்குட்டியை கீழே வைத்து மழலைச் செல்வம் வேண்டி ஸ்ரீசந்தான கால பைரவரை வணங்கிச் செல்வது இவ்வாயத்தின் தனிச்சிறப்பு.

    இந்தப் பிரார்த்தனையில் நிச்சயம் பலம் உண்டு என்பதற்கு இங்கு பெருமளவு காணப்படும் கல்நாய்க் குட்டிகளே சான்றாகத் திகழ்கின்றது.

    ஸ்ரீசந்தான கால பைரவரின் அருளால் குழந்தை பிறந்த பிறகு மக்கட்செல்வம் வேண்டிய தம்பதியர், குழந்தையுடன் புதிய ஒரு கல்நாய்க்குட்டி பொம்மையைக் கொண்டு வந்து நேர்த்திக் கடன் முடித்து சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.

    தெலுங்கு மொழிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தல பைரவருக்குத் தமிழில் அர்ச்சனை செய்வது இன்னுமொரு கூடுதல் சிறப்பாகும்.

    ×