என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோக்கர் 2"

    • சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
    • அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஹாலிவுட்டில் டூட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஹாக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'ஜோக்கர்.

    ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) கதையின் ஹீரோ மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலைஞன்.

    அந்த கலைஞனை ஒரு கட்டத்தில் குடும்பமும் சமூகம் எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையால் சொன்ன படம்தான் 'ஜோக்கர்.

    ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்து அசத்தியதற்காக ஜாக்குவன் பீனிக்ஸுக்கு சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

    ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில்,

    இப்படம் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ஜோக்கர் 2 டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ×