என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளூபெர்ரி சமோசா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமோசாவில் வழக்கமாக உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பி சமோசா தயாராகிறது.
    • டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகத்தில் தயாராகும் இந்த சமோசாவின் விலை ரூ.65.

    சமூக வலைதளங்களில் உணவு பிரியர்களை குறி வைத்து ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் சில சிற்றுண்டி வகைகளின் தயாரிப்புகள் வரவேற்பையும், சில உணவுகள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கின்றன. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் டெல்லி உணவகத்தில் தயாராகும் புளூபெர்ரி சமோசா குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில் சமோசாவில் வழக்கமாக உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பி சமோசா தயாராகிறது. அந்த சமோசா பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.

    டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் இந்த சமோசாவின் விலை ரூ.65 ஆகும். இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×