என் மலர்
நீங்கள் தேடியது "பா சிவந்தி ஆதித்தன்"
- குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.
- எம்.ரமேஷ் மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை:
சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 6-வது கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு கூடுதல் செயலாளர் விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினரும், 'தினத்தந்தி' குழும இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், பி.கோலப்பன், லட்சுமி சுப்பிரமணியன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ் மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.
முன்னதாக பத்திரிகையாளர் குடும்ப நலநிதியத் திட்டத்தின் கீழ் 3 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 133-க்கான மருத்துவ உதவி காசோலைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.






