என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மருந்துகள் பறிமுதல்"

    • ஐதராபாத் நகரில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.
    • போலி மருந்துகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் இல்லாத நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகள் விற்பனையாகி வருகிறது.

    இந்த போலி மருந்துகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.

    இந்த மருந்துகள் நோயை குணப்படுத்துவதில் தோல்வி அடைவது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு பேரழிவு மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

    புற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் போல போலி மருந்துகள் தெலுங்கானாவில் விற்பனையாவது தெரியவந்தது. இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அதில் ஒரு மருந்து பாட்டிலில் உள்ள முகவரி மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    அந்த மருந்து எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் விசாரித்தனர்.

    அங்குள்ள ஊழியர் ஒருவர் மருந்துகள் பார்சல் செய்யப்படும் இடம் தனக்கு தெரியும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஐதராபாத் நகரில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர்.

    அங்கிருந்து லட்சக்கணக்கான மருந்துகளை கைப்பற்றினர். மேலும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 36 வகையான போலி புற்றுநோய் மருந்துகளை கைப்பற்றினர். மொத்தம் ரூ.4.3 கோடி மதிப்புள்ள மருந்துகளை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதில் முக்கிய குற்றவாளி ஒருவரை தேடி வருகின்றனர். 

    ×