என் மலர்
நீங்கள் தேடியது "லாரிகள் தீ"
- தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.
- தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் ஒரு டேங்கர் லாரி, 2 சரக்கு லாரிகள் என 3 லாரிகளை அதன் டிரைவர்கள் நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதில் ஒரு லாரியில் காட்டன் துணி வகைகள் லோடு இருந்தது. மற்ற 2 லாரிகளில் சரக்குகள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென 3 லாரிகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 லாரிகளும் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அப்பகுதியில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து பேலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






