என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிமருந்து லாரி"

    • மணலியில் உள்ள பால்மர் லாரி கண்டெய்னர் முனையத்திற்கு ராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
    • ராணுவ பாதுகாப்புடன் அந்த லாரி செல்வதாக அறிந்த பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருவொற்றியூர்:

    ஆஸ்திரேலியாவிற்கு வெடி மருந்துகள் கொண்டு செல்வதற்காக சென்னை துறை முகத்துக்கு 19 லாரிகளில் வெடிமருந்துகள் கொண்டுவரப்பட்டன. திருவொற்றியூர் விரைவு சாலை வழியாக இந்த லாரிகள் நேற்று இரவு நள்ளிரவு 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று ஒரு லாரி பழுதாகி எண்ணூர் விரைவு சாலை டோல்கேட் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் பழுது ஏற்பட்ட லாரியை சரி செய்ய மெக்கானிக்கை வரவழைத்தனர். பின்பு சரி செய்யப்பட்டு மணலியில் உள்ள பால்மர் லாரி கண்டெய்னர் முனையத்திற்கு ராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

    அங்கு பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே வெடி மருந்துடன் லாரி நின்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழுமோ என்று பொது மக்கள் அச்சப்பட்டனர். ராணுவ பாதுகாப்புடன் அந்த லாரி செல்வதாக அறிந்த பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×