என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில்"

    • வெளி மாவட்டங்களில் இருந்தும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.
    • கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் பெண்கள் மண்டியிட்டு வழிபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்.

    தற்போது இக்கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 4-ந்தேதி செடல் உற்சவம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மாலை இந்த கோவிலுக்கு வந்த 2 முஸ்லிம் பெண்கள் அம்மனை பய பக்தியுடன் வழிபடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    கோவிலுக்கு வரும் அந்த முஸ்லிம் பெண்கள் அம்மன் அருகே நின்று பய பக்தியுடன் சாமி கும்பிடுகின்றனர்.

    பின்னர் அம்மனிடம் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து வழிபாடு செய்கின்றனர். அதில் ஒரு பெண் தனது குழந்தையையும் வழிபாடு செய்ய வைக்கிறார்.

    முஸ்லிம் பெண்கள் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் பய பக்தியுடன் வழிபாடு செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ×