என் மலர்
நீங்கள் தேடியது "பாரிஸ் காளிகாம்பாள்"
- காளிகாம்பாள் கோயில் முன்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருந்த இடத்தில் இருந்தது.
- காஞ்சீபுரம்-திருவண்ணாமலையுமாக இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்
சென்னை தம்புச்செட்டி தெருவிர் பிரமாண்டமான கோபுரத்துடன் வீற்றிருக்கிறது ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயம்.
முன்பு காளிகாம்பாள் கோயில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருந்த இடத்தில் இருந்தது. அப்போது இது ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான இடமாக இருந்தது.
அம்மனை வணங்குவதற்காக அவ்விடத்தில் கூடும் மக்கள் திருவிழா, வேடிக்கை ஆட்டம் பாட்டம் என்று பல்வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டத்துடன் கொண்டாடி வந்தனர்.
அதைத்தொடந்து ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அக்கோவிலில் வழிபட்டு வந்த பக்தர்களை அழைத்து இக்கோவிலை வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள் அதற்கான வசதியை நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்தே காளிகாம்பாளை சென்னை தம்புச்செட்டி தெருவில் நிர்மானித் திருக்கிறார்கள். முதலில் காளிகாம்பாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வீற்றிருந்ததால் இதை கோட்டை அம்மன் என்றும் அழைக்கிறார்கள்.
2 தலங்களை தரிசித்த பலன்
முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் திருவண்ணாமலையை தரிசித்து விட்டு காஞ்சியை தரிசிக்க வேண்டும் என ஆவல் கொண்டார். அதற்காக நைமி சாரண்யத்தில் உள்ள முனிவர்களைச் சந்தித்து காஞ்சீபுரம்-திருவண்ணாமலையுமாக இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்த பலனைத் தரக்கூடிய ஆலயம் எது என்று கேட்டார்.
அதற்கு முனிவர்களில் ஒருவரான சூதபுராணிகர், மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தம் இரு கண்களாக அமையப் பெற்றவள் ஸ்ரீகாளிகாம்பாள் அந்த சிறப்பு பெற்ற தலம் சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் தான் என்று கூறி அருளியிருக்கிறார்.






