என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் வடம்"

    • சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள்.
    • கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தென்னை அதிகளவு பயிரிடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கயிறு தயாரிப்பு தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. சாரம் கட்டுவதற்காக கொச்சை கயிறு, விவசாயத்துக்கு தேவைப்படும் நாற்று கட்டும் கயிறு உள்ளிட்ட கயிறுகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

    மேலும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு தேர்வடங்களையும் தயாரித்து அனுப்புகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவில் தேருக்காக 100 அடி நீளமும், 13 இன்ச் சுற்றளவும் கொண்ட பிரமாண்ட வடக்கயிறு தயாரிக்கும் பணி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாக பகுதியில் தொடங்கி நடைபெற்றது.

    சுமார் 45 பணியாளர்கள் கடுமையாக உழைத்து 1½ டன் எடை கொண்ட பிரமாண்ட வடக்கயிறை உருவாக்கினார்கள். சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் தேர் வடம் தேங்காய் மட்டைகளில் இருந்து நார் உரித்து பக்குவம் செய்து வடக்கயிறாக தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கயிறு தயாரிப்பாளர் நல்லதம்பி கூறியதாவது:-

    கோவில் தேர்களுக்கு வடக்கயிறு தயாரிக்கும் திருப்பணியில் எங்கள் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒரு தொண்டாகவே நினைத்து செய்து வருகிறோம். மேலும் கடுமையான விரதம் இருந்து தேர் வடக்கயிறு தயார் செய்யும் பணியில் ஈடுபடுகிறோம். தற்போது சேலம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலுக்கு 1½ டன் எடையுள்ள தேர்வடத்தை 7 நாட்களில் தயாரித்து அனுப்பியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×