என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் அஞ்சலி"
- பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வி ஞ்ஞானி சி.கலியபெருமாள் மரணம் அடைந்தார்.
- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளின் தமிழ்நாடு, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் நிக்கோ பார், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென் மண்டல இயக்குன ராக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவரும்,இந்த துறையி ல்பிரத மரின் ஆலோசகராகவும் இருந்து வந்த திருக்கோவி லூரை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வி ஞ்ஞானி சி.கலியபெருமாள் (வயது 60) கடந்த சில நாட்களாக திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லவாடி கிராமத்தில் அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 10-ம் தேதி காலை காலை சுமார் 10.30 மணிக்கு மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் அவர் பணியாற்றிய மாநிலங்களில் இருந்து மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவர் காட்டுச்செல்லூர் ராஜவேல், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் எம்.தங்கம், திருக்கோவிலூர் வக்கீல் என்.ஆர்.கே என்கிற என்.ராதாகிருஷ்ணன், பெங்களூர் கே.எஸ்.ஏ குழுமத்தின் உரிமையாளர் தொழிலதிபர் கே.எஸ்.அபிஷேக், போதகர் ஆரோன், திருக்கோவிலூர் மணிவேல்ராஜ், ஆல்பர்ட், ஜெயபால் ரெட்டியார், கிருஷ்ணா பட்டாசு கடை மேலாளர் ஏ.சந்துரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், அனைத்து கட்சி நிர்வாகிகளும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஞ்ஞானி கலிய பெருமாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி பல்லவாடி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்க ள்மரணம் விஞ்ஞானி கலியபெருமாலின் மனைவி சாந்தி, மகன் அபிஷேக் மற்றும் மருமகள் சிந்து ஆகியோருக்கும் ஆறுதல் கூறினர். விஞ்ஞானி கலிய பெருமாள் மரண தகவல் அறிந்து தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறை சார்ந்த அலுவலர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும், பகுதி பொதுமக்களும் மற்றும் உறவினர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.






