என் மலர்
நீங்கள் தேடியது "கனிமாற்று திருவிழா"
- ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி மாற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்.
- கனிமாற்று திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் பழமை வாய்ந்த தேவிஅம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கனி மாற்று திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இதில் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள். விழாவில் மதுரையில் இருந்து ஆண்கள் 17 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வருவார்கள்.
அதன்படி கனிமாற்று திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்றது. சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நெல்பேட்டையில் இருந்து நவநீதகிருஷ்ணன் படம் மற்றும் மலை வாழைப்பழங்களை ஓலைப்பெட்டியில் வைத்து தலைபாரமாக சுமந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவி அம்பாள் கோவிலுக்கு நடந்து சென்றனர். கோவிலுக்கு சென்றடைந்த அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு வருடமும் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை வேண்டியும் இந்த திருவிழா பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.






