என் மலர்
நீங்கள் தேடியது "ஒய் திஸ் கொலவெறி பாடல்"
- நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன்.
- தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது.
துபாய் வாட்ச் வீக்கில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான தனுஷ், ' ஒய் திஸ் கொலவெறி ' எப்படி தற்செயலாக உருவாக்கப்பட்டது என்பது பற்றியும், அதற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் எதிர்பாராதது என்றும் பேசினார்.
இந்தப் பாடல் முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது கைவிடப்பட்டது. ஒரு நாள், கணினியில் இதைக் கண்டுபிடித்து மீண்டும் கேட்டோம். அப்போது அது வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், குறிப்பாக ஒரு பாடலாக கேட்க முடிகிறது. எனவே அதை ஒரு முயற்சியாகப் பார்க்க முடிவு செய்தோம். எங்களுக்குத் தேவையானது ஒரு வெற்றி மட்டுமே, ஆனால் அது வைரலாகி மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றது என்றார்.
மேலும் இந்தப் பாடலை "வரம் மற்றும் சாபம்" என்று கூறிய தனுஷ், "நான் அந்தப் பாடலை விட்டு ஓட முயற்சி செய்கிறேன், ஆனால் அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது" என்றார்.
தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. கிருதி சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த காதல் படம், 'ராஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும்.
- இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவீட் செய்தார்.
'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு பாங்க்ரா ராணுவ வீரர்கள்
தனுஷ் நடிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு உருவான 3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்திருந்தது. இந்நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தின் கிழக்கு காமங் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பாங்க்ரா நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டிருந்தார். ராணுவ வீரர்கள் தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனமாடிய வீடியோவை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இதுதொடர்பான பதிவில், அருணாச்சலபிரதேசத்தில் தமிழ் பாடலுக்கு பாங்க்ரா நடனம். இதைத்தான் நாங்கள் ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத் என்கிறோம். சீக்கிய ரெஜிமண்ட் ஏடிஜிபிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவீட் செய்தார். அதில், பல்லே பல்லே இந்தியாவின் பன்முகத்தன்மையை இப்படித்தான் கொண்டாடுகிறோம். கலாசாரம், நிறங்கள், ஆற்றல் & ஒய் திஸ் கொலவெறி டி! அருணாச்சல பிரதேசத்தில் சீக்கிய படைப்பிரிவின் ஜவான்களின் தனித்துவமான பாங்க்ரா நிகழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






