என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி கரக திருவிழா"

    • பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பல்வேறு விதமான வேண்டுதல்களை முன்வைத்து கரகம் மீதும் உப்பு, மிளகு ஆகியவற்றை வீசுவர்.

    சாமி கோவிலில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து கோயில் அருகில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வார்கள் இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு பணியை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×