என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு விற்பனை"

    • ராஜேஷ் குமார் என்பவர் ரூ.20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
    • ராஜேஷ்குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே சுக்கம்பாளையம் பகுதியில் உள்ள அருள்ஜோதி நகரில் வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் கட்டியும்விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இலவந்தி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் ரூ.20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வீடு கிரயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அவர் வீட்டை பார்வையிட சென்றபோது, அந்த வீட்டிற்குள் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.அவர்களிடம் யார் நீங்கள், எதற்காக இந்த வீட்டில் உள்ளீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் இந்த வீடு மங்கலத்தைச் சேர்ந்த ஒருவருடையது.

    அவரிடம் நாங்கள் வேலை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ராஜேஷ்குமார் தரப்பிற்கும் வீட்டில் இருந்தவர்கள் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து ராஜேஷ்குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×