என் மலர்
நீங்கள் தேடியது "சார்பதிவாளர்கள் சஸ்பெண்டு"
- முறைகேடு புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
- தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 சார்பதிவாளர்கள், விடுமுறையில் இருந்தபோது சார்பதிவாளர்கள் அலுவலகத்திற்கு சென்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி:
நெல்லை மண்டல பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களிலும் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு நடத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் பல சார்பதிவாளர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
மோசடி பத்திரப்பதிவு அங்கீகாரம் மற்ற மனைப்பிரிவுகளை பதிவு செய்து வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய அமைச்சர் மூர்த்தி முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே முறைகேடு புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2 சார்பதிவாளர்கள், விடுமுறையில் இருந்தபோது சார்பதிவாளர்கள் அலுவலகத்திற்கு சென்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கீகாரம் அற்ற மனைப்பிரிவுகளை முறைகேடாக பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் உத்தரவுப்படி நெல்லை டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜ்குமார், சம்பந்தப்பட்ட 2 சார்பதிவாளர்களையும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார்.






