என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலையூர் கண்மாய்"

    • வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலுமே கண்மாய் நிரம்பும்.
    • கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

    திருப்பரங்குன்றம்:

    தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் நிலையூர் கண்மாயும் ஒன்று. மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கண்மாய் 742 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும் கொண்டுள்ளது. பெரியமடை, சின்னமடை, உள்மடை என்று 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னகலுங்கு என்று 2 கலுங்கும் கொண்டதாகும். 1712 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக உள்ளது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மன்னர் காலத்து கண்மாய் என்ற பெருமை கொண்ட போதிலும் கனமழை பெய்யும்பட்சதிலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலுமே கண்மாய் நிரம்பும்.

    அந்தவகையில் கடந்த சில ஒரு வாரத்திற்கு முன்பு தொடர் கனமழை பெய்தாலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கண்மாய் நிரம்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கனமழை கொட்டியது. மேலும் கால்வாய் வழியாக உபரி தண்ணீர் வந்தது. அதனால் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று மறுகால் பாய தொடங்கியது. கடந்த 2018-ம் ஆண்டில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் கண்மாய் சார்ந்த நீர்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் பலவீனமான கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×