என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.கே RK"

    • ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார்.
    • தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, 12-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். நடிகர்.இவர் எல்லாம் அவன் செயல் திரைப்படத்தில் நடித்து உளளார். இவர் மனைவி ராஜி மற்றும், மகள், மருமகனோடு வசித்து வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ராஜியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார். கொள்ளை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு காவலாளி ரமேசுடன் அவரது உறவினர்கள் 2 பேர் நேபாளத்தில் இருந்து வந்து தங்கி உள்ளனர்.

    கொள்ளை நடந்த நாள் அன்று காவலாளி ரமேஷ் விடுப்பு எடுத்து வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவருடன் தங்கிஇருந்த உறவினர்களும் மாயமாகி இருப்பதால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ×